கோயம்புத்தூர்: தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் அதிகளவு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், அப்பகுதியில் மண் எடுக்கவும் செங்கல் சூளைகள் இயங்கவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மாங்கரை பகுதியில் செம்மண் எடுக்கப்பட்ட தடயங்களை கனரக இயந்திரங்கள் கொண்டு மறைக்கும் காணொலி வெளியாகிய நிலையில், அச்செயலுக்கு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில், நேற்று கோவை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர், துடியலூர் வருவாய் அலுவலர், வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க புகார் ஆனால் தடயங்களை மறைத்த இடத்தை விட்டுவிட்டு, வேறொரு இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். செங்கல் சூளை முதலாளிகளிடம் ஆதாயம் பெற்று கொண்டு மாவட்ட ஆட்சியரிடமும், பசுமைத் தீர்ப்பாயத்திற்கும் பொய்யான ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் சமூக செயற்பாட்டாளர்கள் புகாரளித்துள்ளனர்.