கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு (நவ.02) முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றின் மையப்பகுதியில் பாறை மீது அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (நவ.03) அதிகாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு இரவு காவலர்களாக பணிபுரிந்து வரும் சோமந்துரை சித்தூரை சேர்ந்த திருமணசாமி, மகாலிங்கம் ஆகிய இருவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து, கோட்டூர் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
வெள்ளத்தில் சிக்கிய கோயில் பாதுகாவலர்கள் மீட்பு பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் தண்ணீரில் நீந்திச் சென்று வெள்ளத்தில் சிக்கிய இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
இதையும் படிங்க:தொடர் மழையால் மரக்காணம் அருகே தரைப்பாலம் மூழ்கியது - 5 கிராமங்கள் பாதிப்பு!