கோயம்புத்தூர்: வால்பாறை பி.கே டீ-க்கு சொந்தமான காஞ்சமலையிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று(மே.31) காலைப் பணிக்குச் செல்லாமல் புறக்கணித்தனர்.
தற்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய குடியிருப்பு, கழிப்பறை வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல் போன்றவை பல ஆண்டுகளாகியும் புதுப்பிக்காமல் இருப்பதாகக் கூறி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாமல் புறக்கணித்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி நிர்வாக பொது மேலாளர், கள மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வால்பாறை ஏடிபி தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை வீ. அமீது, எல்பிஎஃப் தொழிற்சங்கத் தலைவர் கோழிக்கடை என். கணேசன் சௌந்தரபாண்டியன் ஆகியோர் நிர்வாகத் தரப்பில் உள்ள மேலாளர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.