தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை

கோவையில் 9 டாஸ்மாக் கடைகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை செயல்படாது.

கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை
கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை

By

Published : Aug 6, 2021, 10:46 PM IST

Updated : Aug 6, 2021, 11:05 PM IST

கோவை: கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி மாவட்டத்தில், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், தேநீர் கடைகள், பேக்கரிகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இயங்கும்.

மீன், இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை

மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்கள் செயல்படத் தடை தொடர்ந்துவரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், இறைச்சிக் கடைகள், பூங்காக்கள், மால்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபானக்கடைகள் செயல்படத் தடை

இந்நிலையில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவையில் அதிகம் கூடும் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, துடியலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் ஒன்பது டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க தடை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை இயங்கும்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு'

Last Updated : Aug 6, 2021, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details