பீளமேடு டாஸ்மாக் மதுபான கிடங்கில் இருந்து கருமத்தம்பட்டியில் உள்ள மதுபானக் கடைக்கு சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் மினிலாரியில் ஏற்றி வரப்பட்டுள்ளது.
கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது மினி லாரியின் டயர் வெடித்து பஞ்சர் ஆனதால் நிலைகுலைந்த மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மினிலாரியில் வைக்கப்பட்டிருந்த பல ரகங்களை சேர்ந்த மதுபாட்டில்கள் உடைந்து சேதமானது.
மேலும் சாலையில் தண்ணீர் போல் மதுபானம் ஓடியது. நல்வாய்பாக வாகனத்தில் இருந்த ஓட்டுநர் பாலாஜி, கிளீனர் மணி இருவரும் காயமின்றி தப்பினர்.
கவிழ்ந்த நிலையில் மினி லாரி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் சாலையில் கொட்டிக்கிடந்த மதுபாட்டிகள் மீது தார்பாய் கொண்டு மூடினர்.
அதேசமயம் சேதமான மதுபாட்டில்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீவைகுண்டம் அருகே கார் - சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழப்பு!