கோவை மாவட்டம் அரசூரில் தனியார் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் விண்வெளி கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி பயிற்சி நிறுவன திட்டத்த்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.
விண்வெளி கருவிகள் வடிவமைப்பு விழா... அமைச்சர்கள் பங்கேற்பு! - tamilnadu ministers attending
கோவை: தனியார் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் விண்வெளி கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி பயிற்சி நிறுவன திட்ட தொடக்க விழாவில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் சம்பத், போயிங் விமான நிறுவனமும், எல்.எம்.டபிள்யூ நிறுவனமும் இணைந்து இந்த பயிற்சி மையத்தை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் வெளிவருகின்றனர். இங்கு மனிதவளம் அதிகமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் வாகனங்களைக் கடந்து, அடுத்ததாக உலகம் மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்குப் பின்னர் நம் மாநிலதிற்கு, அதிக அளவு முதலீடு வரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூர், சென்னை - கன்னியாகுமரி தொழில் மேம்பாட்டுத் தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கி தொழில் மேம்பாட்டுத் தடம் உருவாக்க வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களை இணைக்கும் விதமாகத் தொழில் மேம்பாட்டுத் தடம் விரைவில் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.