தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழில் 'திராவிட மாதிரி' எனச் சொன்னால் நன்றாக இருக்கும் - தமிழிசை - கோயம்புத்தூர்

தமிழ்நாடு அரசு ஓராண்டு நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள். அடுத்த நான்காண்டுகளில் மக்களுக்கு புதிய நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கவேண்டும். 'திராவிட மாடல்' என்று சொல்லாமல் 'திராவிட மாதிரி' எனத் தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்" எனத் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழில் 'திராவிட மாதிரி' என சொன்னால் நன்றாக இருக்கும் - தமிழிசை
தமிழில் 'திராவிட மாதிரி' என சொன்னால் நன்றாக இருக்கும் - தமிழிசை

By

Published : May 7, 2022, 2:38 PM IST

கோயம்புத்தூர்: சூலூர் நீலம்பூர் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ரோட்டரி நடத்தும் உற்சவம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "இந்தியாவில் போலியோவை ஒழிக்க ரோட்டரி பாடுபட்டுள்ளது. பாண்டிச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு ரோட்டரி போன்ற சேவை இயக்கங்கள் பெரிதும் உதவி செய்தன.

போதை ஒழிப்பிற்கு சேவைகள் செய்யவேண்டும்: பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்த காரணம் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததும் ஒரு காரணம். இதை மாற்ற பிரதமர் மோடி, வீடுகள் தோறும் கழிப்பறை வசதி செய்து கொடுத்தார். அனைவரும் தாய் மொழியை முதன்மையாகக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழில் 'திராவிட மாதிரி' எனச் சொன்னால் நன்றாக இருக்கும் - தமிழிசை

தாய் மொழி கற்றுக் கொள்வது முதலில் தாய்ப்பாலை பிறந்த குழந்தை முதலில் அருந்துவது போன்றது. தாய் மொழியை கற்றுக்கொண்டு பிற மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

10 கோடிக்கு மேல் இன்றைய இளைஞர்கள் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் போதை ஒழிப்பிற்கு சேவைகள் செய்யவேண்டும்" எனப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோயம்புத்தூர் மாவட்டம் தூய்மையான நகரங்களில் இந்தியாவில் ஒன்றாக திகழ்வது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

நோய்த் தடுப்பூசியை பொதுமக்களிடம் கொண்டுசெல்ல மாநில அரசுகள் முழுமையாக செயல்பட்டுள்ளன.

'திராவிட மாதிரி': மத்திய அரசும் அதற்கான ஏற்பாட்டைச் செய்தது. இதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. அனைவரும் பூஸ்டர் தோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் நோய்த் தொற்றால் இறந்தவர்கள் அதிகம் எனத் தவறான தகவல்கள் உலக அமைப்புகளால் சொல்லப்பட்டு வருகின்றன, அது முற்றிலும் தவறானது. இறப்பு விகிதங்களை சரிவர மத்திய அரசு கையாண்டு வருகிறது.
நோய்த் தொற்று பரவலை வெற்றிகரமாக இந்தியா எதிர்கொண்டுள்ளது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஓராண்டு தமிழ்நாட்டில் நிறைவு செய்துள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல தமிழ்நாடு அரசு பாடுபடவேண்டும். தமிழ்நாட்டில் தாய்மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

'திராவிட மாடல்' என சொல்வதற்கு பதிலாக தமிழில் 'திராவிட மாதிரி' என சொன்னால் நன்றாக இருக்கும். புதிய கல்விக் கொள்கை மூலம் தாய் மொழியை கற்றுக்கொண்டு பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'காயத்ரி ரகுராம் பதவி பறிப்பு; பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியல்!'

ABOUT THE AUTHOR

...view details