தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாயுடன் பேச்சுவார்த்தை; யாசகரிடம் யாசகம்! - மன்சூர் அலிகானின் பிரச்சார அலப்பறை! - தொண்டாமுத்தூர் தொகுதி

கோவை: தெருநாயுடன் பேச்சுவார்த்தை, யாசகரிடம் யாசகம் என தொண்டாமுத்தூர் தொகுதியையே கலக்கி வருகிறார் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான்.

mansoor
mansoor

By

Published : Mar 20, 2021, 5:40 PM IST

தொண்டாமுத்தூர் தொகுதி சுயேட்சை வேட்பாளரான நடிகர் மன்சூர் அலிகான், நடைப்பயிற்சி மேற்கொள்வது, பூங்காவில் விளையாடுவது, எருக்கம்பு பூவை உடைத்து எதிர்காலத்தை கணிப்பது போன்ற வித்தியாச செயல்பாடுகளுடன் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அதனைத்தொடர்ந்து இன்று பேரூர் பகுதியில் ஆதரவு திரட்டிய மன்சூர் அலிகான், அங்குள்ள மளிகைக்கடை, காய்கறி கடை, பூக்கடை வியாபாரிகளை நேரில் சந்தித்து வாக்கு கேட்டார். அப்போது, ஒரு பெண் வியாபாரி எங்கள் தொகுதியில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறவே, நாட்டில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்று மன்சூர் கேள்வி எழுப்பினார்.

நாயுடன் பேச்சுவார்த்தை; யாசகரிடம் யாசகம்! - மன்சூர் அலிகானின் பிரச்சார அலப்பறை!

பின்னர், அப்பகுதியில் இருந்த ஒரு கோவிலுக்கு பக்கத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பையின் அருகே அமர்ந்த மன்சூர் அலிகான், இதனை சுத்தம் செய்யாவிட்டால் கரோனா வரும் என்று தெரிவித்தார். மேலும், அங்கிருந்த ஒரு தெருநாயிடம் அமர்ந்து பேசினார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குறித்தும் வைத்து கொண்டார். பின் அங்கிருந்த ஒரு யாசகரிடம் பிஸ்கட்டை யாசகம் வாங்கி சாப்பிட்டு, பின் அதை நாய்க்கும் அளித்தார். அப்படியே, உணவகத்தில் உணவருந்தியும், தேநீர் கடையில் காபி குடித்தும் மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

இதையும் படிங்க:'இலையில் விசில், எருக்கம் பூ விளையாட்டு' - 90ஸ் கிட்ஸின் உணர்வுகளை தூண்டி விட்ட மன்சூர்

ABOUT THE AUTHOR

...view details