கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஆசிரியர் காலனியில் கனரா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் கனரா வங்கி ஏடிஎம்மிற்கு மர்ம நபர்கள் இருவர் வந்துள்ளனர்.
ஒருவர் வெளியே நின்றுகொள்ள மற்றொருவர் ஏடிஎம்மின் உள்ளே நுழைந்து இயந்திரத்தை உடைக்க முற்பட்டுள்ளார். உடனே வங்கியின் சைரன் ஒலித்துள்ளது. இதனால் அச்சமடைந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.