தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் கைது - தற்கொலை வாக்குமூல கடிதம்

ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளி மாணவியின் இறப்பு கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவி தற்கொலை; ஆசிரியர் கைது
student-suicide-teacher-arrested

By

Published : Nov 13, 2021, 2:50 PM IST

Updated : Nov 17, 2021, 1:46 PM IST

கோயம்புத்தூர்: தனியார் பள்ளியில் பயின்றுவந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் பயிலும் பள்ளியில் படிக்க விருப்பம் இல்லையெனக் கூறி பள்ளியிலிருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கியுள்ளார்.


அம்மாணவி நேற்று முந்தினம் (நவ. 11) வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இத்துடன் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதத்தில் மூவரின் பெயர்களை எழுதிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


பின்னர், முதல்கட்ட விசாரணையில் மாணவி முன்னர் படித்துவந்த தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியரால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் இதனைப் பற்றி புகார் தெரிவித்தும்கூட அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவி கடும் மன உளைச்சளுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியவந்துள்ளது.


இதனையடுத்து மாணவியின் தற்கொலை வாக்குமூல கடிதம், செல்போன், மாணவியின் நண்பரது செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் மாணவி தன்னுடைய நண்பரிடம், தொடர்ந்து ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துவருவதாகவும், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறியிருப்பது தெரியவந்துள்ளது.


குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தில் இரண்டு பிரிவுகள் என மொத்தம் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து நள்ளிரவில் நீதிபதி இல்லத்தில் முன்னிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் தொடர் பாலியல் தொல்லை: கோவை மாணவி தற்கொலை

Last Updated : Nov 17, 2021, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details