கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நீட் பயிற்சி மையத்தில், 65 மாணவிகள் உள்பட 130 பேர் பயின்று வருகின்றனர்.
இந்த மையத்தில், கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்வேதா(18) என்ற மாணவி, 2021ஆம் ஆண்டு முதல், பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி படித்து வந்தார். ஸ்வேதாவும், அங்கு படிக்கும் யோகேஸ்வரன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த பெற்றோர், இருவரும் பேசிக் கொள்ளக் கூடாது எனக் கண்டித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம், யோகேஸ்வரனை படிக்க வேண்டாம் எனக் கூறி, அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.