பொள்ளாச்சி அருகேயுள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் படித்து, அங்கேயே வேலை செய்துவந்த ஆனந்த் நேற்று நண்பர்களுடன் ஆழியார் அணைக்குச் சுற்றுலா வந்துள்ளார்.
குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி! - பொள்ளாச்சி
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பள்ளிவழங்கல் தடுப்பணை நீர்த் தேக்கத்தில் குளிக்கச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவன், நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி..!
அப்போது அருகிலிருந்த, பள்ளி வழங்கல் தடுப்பணையில் குளிக்கும்போது நீரில் மூழ்கி ஆனந்த் உயிரிழந்தார். இது குறித்து, உடன்வந்த நண்பர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஆற்றில் குளிக்கும்போது பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால், இது போன்ற சம்பவங்கள் நடந்துவருவது வாடிக்கையாகியுள்ளது என்றனர்.