தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்லூரியில் புகுந்த நாயை அடித்து கொன்ற ஊழியர்கள்.. வைரல் வீடியோ - நாய்

கோவையில் தனியார் கல்லூரி வளாகத்தில் புகுந்த தெரு நாய் ஒன்றை, ஊழியர்கள் அடித்து கொலை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கல்லூரியில் புகுந்த நாயை அடித்து கொன்ற ஊழியர்கள்: வைரல் வீடியோ
கல்லூரியில் புகுந்த நாயை அடித்து கொன்ற ஊழியர்கள்: வைரல் வீடியோ

By

Published : Sep 1, 2022, 5:14 PM IST

கோயம்புத்தூர்:சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் இயங்கி வரும் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் தெரு புகுந்த நாயை, கல்லூரி ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த காட்சிகளை பதிவு செய்த கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த காட்சிகளில் ஊழியர்கள் புதருக்குள் சிக்கிய தெரு நாய் கட்டையால் தாக்குவதும், வலியால் நாய் கத்துவதும் பதிவாகி இருக்கிறது.

வைரல் வீடியோ

கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த தெரு நாய் ஒன்றை கல்லூரி ஊழியர்கள் விரட்டியுள்ளனர். அப்போது வளாகத்தில் இருந்த புதர் ஒன்றில் சிக்கிக் கொண்ட நாயை ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் நாயை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நாய் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில் கயிறு மூலம் இருவர் இழுத்துச் சென்று வெளியில் எரிந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பின் சட்ட ஆலோசகர் ஐஸ்வர்யா என்பவர், வீடியோ காட்சிகளுடன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வயிற்றில் கருவுடன் இருந்த நாய் கொலை.. சர்வதேச நாய்கள் தினத்தில் கொடூரம்..

ABOUT THE AUTHOR

...view details