தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா முன்களப் பணியாளர்களுக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர்த்தூவி பாராட்டு - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் ஆகியோருக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர்த்தூவி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்கள பணியாளர்களுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவி பாராட்டு
முன்கள பணியாளர்களுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவி பாராட்டு

By

Published : Jan 2, 2021, 7:09 PM IST

கோயம்புத்தூர்: கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை விழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் ஆகியோரைப் பாராட்டும்விதமாக ஹெலிகாப்டரிலிருந்து மலர்த்தூவி கெளரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "முன்களப் பணியாளர்களுக்கு இதுபோன்று ஒரு பாராட்டுதல் அளிப்பது வரவேற்கத்தக்கது. இந்த மாதிரியான பாராட்டுதல் நடத்தப்படுவது அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்னை மிரட்டாதீர்கள்?' - ஸ்டாலினை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுத்த பெண்

ABOUT THE AUTHOR

...view details