கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குள் திடீரென்று மலைப்பாம்பு ஒன்று புகுந்து அங்கு இருந்த பூனையை விழுங்க அதனைச் சுற்றிவளைத்தது, இதனை பார்த்து அங்கிருந்த பக்தர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். மலைபாம்போ துளிக்கூட அங்கிருந்து நகராமல் பூனையை இறுக்கிக் கொண்டது.
கோயிலுக்குள் புகுந்த மலைப்பாம்பு; பக்தர்கள் பீதி!
கோவை: மருதமலை பாம்பாட்டி சித்தர் குகை அருகே பூனையை விழுங்க முயன்ற மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர் காட்டுக்குள் விட்டனர்.
snake caught in temple
அதன் பின் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள் பாம்பை மீட்டு மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதியில் விட்டனர். பாம்பு பிடிபடும் காட்சியை அங்கிருந்தவர்கள் பலர் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான இங்கு அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்