தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கமல் ஹாசனை விவாதத்திற்கு அழைத்த ஸ்மிருதி இரானி - Kovai south

கோயம்புத்தூர்: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் ஸ்மிருதி இரானி இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்றார்.

கோயம்புத்தூரில் ஸ்மிருதி இரானி
Smriti Irani invited Kamal Haasan to the debate

By

Published : Mar 27, 2021, 3:31 PM IST

Updated : Mar 27, 2021, 9:14 PM IST

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் தீவிர பரப்புரை மேற்கொண்டுவரும் நிலையில் இன்று (மார்ச் 27) அவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்று வாக்குச் சேகரித்தார்.

இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்ற அமைச்சர் ஸ்மிருதி இரானி

தேர் நிலை திடலில் ஆரம்பித்த இந்த இருசக்கர வாகன பேரணியில், அவர் ஒப்பணக்கார வீதியில் கலந்துகொண்டு தெப்பக்குளம் பகுதிவரை பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் குஜராத்திய பெண்களுடன் இணைந்து பாரம்பரிய நடனம் ஆடினார்.

குராஜத்தியில் பேசிய ஸ்மிருதி இரானி

பின் குஜராத்திய மக்களிடம் அவர் சிறப்புரையாற்றிய போது, கமல் ஹாசனுடன் விவாதிக்க நாங்கள் தயார் என்றும் காங்கிரஸ் எங்களுக்கு போட்டியில்லை எனவே கமலை பற்றி விமர்சிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜமாப் அடித்து வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளர்!

Last Updated : Mar 27, 2021, 9:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details