கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிபிஐ அகில இந்திய மாநாடு 2022ஆம் ஆண்டு அக்டோபர் 18 முதல் விஜயவாடாவில் 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதன் முன்னோட்டமாக ஜனவரி மாதம் கோவை பீளமேட்டில் 3 நாள்கள் தேசிய குழு உறுப்பினர்கள் கூடி மாநாட்டில் இறுதி செய்யப்படவுள்ள அறிக்கைகள் முடிவு செய்யப்படும்.
பதவி விலக வேண்டும்
மத்தியில் உள்ள மோடி தலைமையிலான ஆட்சி, ஜனநாயக விரோதமான முறையில் நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டிய அவர், நாடாளுமன்றத்தில் பல்வேறு சட்டங்களை ஆர்.எஸ்.எஸ்.சின் விருப்பத்தின் அடிப்படையில் நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற விவகாரத்தில் மோடி பதவி விலகியிருக்க வேண்டும் எனக்கூறிய அவர், இதற்கு முன்னுதாரணமாக தமிழகத்தில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர முயன்றதை எதிர்த்ததால் ராஜாஜி ராஜினாமா செய்ததை சுட்டிக்காட்டினார்.
லக்கிம்பூர் விவகாரத்தில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழு கூறிய பிறகும் படுகொலை சம்பவத்தை அரங்கேற்றிய அமைச்சர் இதுவரை பதவி விலகவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். சிறு, குறு தொழில்கள் மூலப்பொருள் விலை உயர்வால் முடங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பாக மாறிவிட்டது.
கண்டனம்