தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யானை உயிரிழப்பு; வனத்துறையினருக்கு ஜிபிஎஸ் வழங்க சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை - சூழலியல் ஆர்வலர்கள்

போளுவாம்பட்டி வனச்சரகத்தில் யானையின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வனப்பகுதிக்குள் வனத்துறையினர் ரோந்து செல்லாததால் வனக்குற்றங்கள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது என சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யானை உயிரிழப்பு
யானை உயிரிழப்பு

By

Published : Mar 16, 2022, 11:00 PM IST

கோவை:போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கடுக்காய் பாறை வனப்பகுதியில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, மலைச்சரிவில் யானையின் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, முதுமலை வனத்துறை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று பரிசோதித்ததில் 7வயது மதிக்கத்தக்க பெண் யானையின் எலும்புக் கூடுகள் என்பது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக, யானையின் எலும்புகள் டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டது.

யானையின் எலும்புக் கூடு

இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில் 'ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனத்துறையினர் எலும்புக்கூட்டைக் கண்டனர். இந்நிலையில் அதனை மருத்துவக் குழு ஆய்வு செய்ததில் உயிரிழந்தது பெண் யானை என்பதை மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர். மேலும் மற்ற பரிசோதனைகளுக்காக யானையின் எலும்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

யானையின் தலைப்பகுதி

சூழலியல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து சூழலில் ஆர்வலர்கள் கூறுகையில், 'யானை உயிர் இழந்து சில மாதங்கள் ஆன நிலையில், வனத்துறையினர் முறையாக ரோந்து பணி செல்லாததால் காலதாமதமாகக் கண்டுபிடித்துள்ளனர். தற்போது வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து செல்வது என்பது கிடையாது; இதன் காரணமாக வனப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது' என்று குற்றம்சாட்டினார்.

வனத்துறைக்கு ஜிபிஎஸ் கருவி

இதன்மூலம் மேலும், வேட்டைத் தடுப்பு காவலர்கள் முதல் வனச்சரகர்கள் வரை, இரவு நேரத்தில் யானை விரட்டும் பணிக்காகச் செல்வதால் பகல் நேரத்தில் ஓய்விற்குச் சென்றுவிடுகின்றனர்; வனப்பகுதிக்குள் ரோந்து செல்வது கிடையாது. வனப்பகுதியில் ரோந்து செல்பவர்களுக்கு ஜிபிஎஸ் கொடுக்கப்பட்டு அவர்கள் செல்லும் பாதையைக் கணக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கர்நாடகத்தின் ஹிஜாப் தடைக்கு எதிராக சென்னையில் 2ஆவது நாளாக மாணவர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details