தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கஞ்சா விற்பனையில் போட்டி: 2 இளைஞர்களை வெட்டிய 6 பேர் கைது - இளைஞர்களை வெட்டிய ஆறு பேர் கைது

கோயம்புத்தூர்: கஞ்சா விற்பனை தொழில் போட்டியில் இரு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்

கஞ்சா விற்பனையில் போட்டி

By

Published : Jul 14, 2021, 10:59 PM IST

கோயம்புத்தூர் வெள்ளக்கிணறு பகுதியில் இரு இளைஞர்களை வழிமறித்து 11 பேர் கொண்ட கும்பல் கடந்த 12ஆம் தேதி அரிவாளால் தாக்கியது.

காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன் சிசிடிவி காட்சியைக் கொண்டு துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் அதில் சம்பந்தப்பட்ட கண்ணன், சங்கீத், கோபிநாத், அஜய், பிரகாஷ், தினேஷ் ஆகிய ஆறு பேரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஐந்து பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details