மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் கேதா நகரில் கடந்த அக்டோபர் 2 முதல் 6 வரை உலக சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற புலியகுளம் சிலம்பாலயா மாணவர்கள் எட்டு பேருக்கு கோவை ரயில் நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற மாணவர்கள் சிலம்பத்தின் உள்பிரிவுகளில் வென்ற பதக்கங்கள்:
- சுருள் வாள்வீச்சு - நான்கு வெள்ளி,
- கம்படி - மூன்று வெண்கலம்,
- நேரடி சண்டை - நான்கு தங்கம்,
- மான் கொம்பு - நான்கு வெண்கலம்,
- குழுக் கம்பு - நான்கு வெள்ளிப் பதக்கம்