கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, அதனை திரும்ப பெற வலியுறுத்தி கோவை காந்திபுரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தனர். அதன்பின் பல்வேறு அமைப்புகளின் கட்சியினர் கையெழுத்திட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு எதிராக நடைப்பெற்ற கையெழுத்து இயக்கம் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது, “மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
அவை குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், தேசிய மக்கள் பதிவேடுகளை கைவிட வேண்டும் என்றும், மக்கள் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரியும் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
பல மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? குடியுரிமை சட்டம் 1955ல் நிறைவேற்றப்பட்டு விட்டது. மதத்தின் அடிப்படையிலும், மக்களின் மனங்களில் அடிப்படையிலும் மத்திய அரசு தவறான விளைவை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.
இதையும் படிக்க:சி.ஏ.ஏ.வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்: ஸ்டாலின் தொடங்கிவைப்பு