கோயம்புத்தூர்:ஆனைகட்டி மேற்குத் தொடர்ச்சி மலையைச் சுற்றி ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு மாங்கரை வனப்பகுதி வழியாகப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை (பிப்ரவரி 4) கோவையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று ஆனைகட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
வனப்பகுதிக்குள் யானையை விரட்டிய பழங்குடியின மக்கள் மாங்கரை வனப்பகுதி வழியாக மலைப்பாதையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையில் சென்றுகொண்டிருந்த ஒற்றை ஆண் காட்டு யானை பேருந்தைப் பார்த்ததும் ஆவேசமாக ஓடிவந்து தாக்க முயன்றது.
இதனையடுத்து பேருந்திலிருந்த பழங்குடியின மக்கள் அந்த யானையைப் பார்த்து போ போ போயிரு சாமி எனச் சத்தமிட அந்த யானை அமைதியாக வனப்பகுதிக்குள் திரும்பியது. இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:கோவிட் தொற்று: பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடம்