இலங்கை ரவுடி அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஐ.ஜி சங்கர் தலைமையில், இந்த விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதுகுறித்து, இன்று (ஆக.4) கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவகத்தில் ஐ.ஜி.சங்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ஐ.ஜி சங்கர், "ரவுடி அங்கோடா லொக்கா மரணம் குறித்து, இதுவரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரணை செய்ய டி.எஸ்.பி., சிபிசிஐடி ராஜு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை விசாரணை செய்ய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.