கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பன்னிமடை, தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவற்றில் சில யானைகள் உணவு தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகள், விளை நிலங்களில் புகுவது தொடர்ந்து வருகிறது.
ஹலோ நாங்க இல்லாமல் புதுமனை புகுவிழாவா?
கோயம்புத்தூர் மாவட்டம் அருகேவுள்ள புதுமனை புகுவிழா நடைபெற்ற வீட்டில் இருந்த வாழை மரங்களை காட்டு யானைகள் சாப்பிட்டுச் சென்ற காணொலி வைரலாகிவருகிறது.
வாழை மரங்களை சாப்பிட்ட யானைகள்
இந்நிலையில் நேற்றிரவு (டிசம்பர் 13) 9 மணியளவில் கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகரிலுள்ள குடியிருப்புக்குள் நடையைக் கட்டியது. அப்போது, அங்கு புது வீடு கட்டப்பட்டு புதுமனை புகுவிழா நடந்தது. இதனைக் கண்ட காட்டு யானைகள் விழாவைச் சிறப்பிக்க சென்று வாசலில் இருந்த வாழை மரங்களைச் சாப்பிட்டன.
இதையும் படிங்க:யானைகள் இறப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - நீதிமன்றம் கேள்வி