எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் மாநில தலைவர் முபாரக் பேசியதாவது, ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை சம்பவம் - நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல் - death of IIT student Fatima Latif
கோயம்புத்தூர்: ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், அயோத்தி வழக்கில் மறுபரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கவேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதை இஸ்லாமியர்கள் வாங்கக்கூடாது. வரும் 18ஆம் தேதி நடக்க இருக்கும் உயர்மின் கோபுரத்திற்கு எதிரான போராட்டத்தில் எஸ்டிபிஐ ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாத்திமாவின் தற்கொலை மதரீதியான துன்புறுத்தலில் தான் நடந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.