தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளி மாணவனைக் கடித்து குதறிய கரடி - பள்ளி மாணவனை கடித்து குதறிய கரடி

வால்பாறை அருகே நேற்றிரவு இயற்கை உபாதையினை கழிக்கச் சென்ற பள்ளி மாணவனை கரடி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரடி கடித்து படுகாயம்
கரடி கடித்து படுகாயம்

By

Published : Dec 19, 2021, 11:00 PM IST

கோயம்புத்தூர்:வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர், ராகுல்(17). இவர் அவருடைய அத்தை, மாமா வீட்டில் தங்கி பிளஸ் +2 படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு 10:45 மணியளவில் இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது புதரில் பதுங்கியிருந்த கரடி ஒன்று பாய்ந்து வந்து, ராகுலைக் கடித்துள்ளது.

பின்னர் அலறிய ராகுலின் குரல் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வர, கரடி மாணவனை விட்டுச்சென்றது.

இதனால் அப்பள்ளி மாணவன் ராகுல் உயிர் தப்பினார். இதனையடுத்து தகவலறிந்த வனத்துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து ராகுலை இருசக்கர வாகனத்தில், வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, முதலுதவி அளித்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் கரடியைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:மாநாடு 25ஆவது நாள் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி!

ABOUT THE AUTHOR

...view details