தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மலை ரயில் செல்லும் பாதையில் மண்சரிவு - சரி செய்யும் பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மலை ரயில் செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதனை சரி செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மலை ரயில் பாதையில் மண்சரிவு
மலை ரயில் பாதையில் மண்சரிவு

By

Published : Oct 11, 2021, 6:02 PM IST

கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று (அக்.10) காலை 180 சுற்றுலாப் பயணிகளோடு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில், ரயில் சென்றபோது ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருந்ததை ரயில் ஓட்டுநர் கவனித்தார்.

தொடர்ந்து ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

மண்சரிவால் ஏற்பட்ட பயணத்தடை

இதனைத்தொடர்ந்து, மலை ரயில் மீண்டும் கல்லார் ரயில் நிலையத்திற்குத் திரும்பியது. இதனையடுத்து தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் ரயில்வே பணியாளர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 நாட்களுக்கு மலை ரயில் ரத்து

சீரமைப்புப் பணி முடிய இரண்டு நாள்கள் இருக்கும் என்பதால் இன்றும், நாளையும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:குன்னூர் மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் - ரயில் போக்குவரத்து பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details