தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக எம்.எல்.ஏ நிவாரண பொருள்கள் வழங்குவதில் பாரபட்சம் - நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம்

கோவை: நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி அதிமுக எம்எல்ஏ கொடுத்த நிவாரண பொருள்களை பொதுமக்கள் சாலையில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் - பொதுமக்கள் சாலையில் வைத்துவிட்டு சென்றனர்.
நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் - பொதுமக்கள் சாலையில் வைத்துவிட்டு சென்றனர்.

By

Published : May 5, 2020, 1:53 PM IST

கோவை மாவட்டம் உக்கடம், முத்தண்ணன் குளம், பால் கம்பெனி, சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் நீர் நிலைகள் அருகே வசித்து வந்தவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு தற்போது மலுமிச்சம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அதிமுக கட்சியின் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் தலைமையில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் அதிமுகவினர் கரோனா நிவாரண பொருள்கள் தருவதாக கூறி அப்பகுதி மக்களுக்கு டோக்கன் கொடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து நேற்று மளிகை பொருள்களை வழங்கினர். அப்போது அதிமுகவினர் வழங்கிய பொருள்கள் தரமற்றதாக இருப்பதாக கூறி வாங்கியவர்கள் திருப்பிக்கொடுத்து அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் அருண்குமார் வழங்கிய நிவாரண பொருள்களில் 5 கிலோ அரிசி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருள்கள் இருந்தன. ஆனால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் வழங்கிய பொருள்கள் தரமற்றவையாகவும், குறைவானதாகவும் இருந்ததை மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரே குடியிருப்பில் உள்ள மக்களிடம் பாகுபாடு பார்ப்பதாக குற்றஞ்சாட்டி சாலையிலேயே பொருள்களை வைத்துவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய காவலர்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details