கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் ரேக்ளா பந்தயம் நடத்துவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு நாட்டு மாடுகள் பூட்டப்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.
பெரியபுத்தூர் செல்லாண்டியம்மன் கோயிலிலிருந்து கெம்பநாயக்கன்பாளையம் கிராமம் வரை ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் 30-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. உள்ளூர் இளைஞர்கள் கலந்துகொண்டு மிகுந்த உற்சாகத்தோடுபோட்டிபோட்டு வண்டிகளை ஒட்டிச்சென்றனர்.