தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சந்திரபிரகாஷின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - KCP Engineering Office

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான சந்திரபிரகாஷ் என்பவரின் இல்லம், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

சந்திரபிரகாஷின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
சந்திரபிரகாஷின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

By

Published : Aug 11, 2021, 9:49 PM IST

Updated : Aug 11, 2021, 10:13 PM IST

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (ஆக. 10) சோதனை மேற்கொண்டர்.

எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீடு, கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் வீடு, வடவள்ளியில் உள்ள எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் வீடு,அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

தொடரும் சோதனை

இரண்டாவது நாளாக பீளமேட்டில் உள்ள சந்திரபிரகாஷ் மேலாண்மை இயக்குநராக இருந்துவரும் கேசிபி இன்ஜினியரிங் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

அங்கு சோதனை நடைபெற்று வரும் நிலையில், சந்திரபிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தூத்துக்குடியில் எஸ்.பி.வேலுமணி - சிறப்பு தரிசனமா...ரகசிய சந்திப்பா?'

Last Updated : Aug 11, 2021, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details