தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை: தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பாஜக மாநிலப் பொருளாளர்! - கோவை மாவட்ட அண்மைச் செய்திகள்

தைப்பூசத்திற்கு பொது விடுமுறையளித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு, பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பாஜக மாநில பொருளாளர்
தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பாஜக மாநில பொருளாளர்

By

Published : Jan 5, 2021, 11:05 PM IST

Updated : Jan 6, 2021, 2:50 PM IST

கோயம்புத்தூர்: கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், அணி, பிரிவுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தனது வேல் யாத்திரையின்போது வைத்த முக்கியமான கோரிக்கையான தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை என்பதை கனிந்த மனதோடு பரிசீலித்த தமிழ்நாடு அரசு, முருகப்பெருமானின் விழாக்களில் ஒன்றான தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளித்துள்ளதற்குத் தமிழ்நாடு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

டெல்லியில் விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் போராடிவருகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி குறித்து மேலிடம் விரைவில் முடிவு எடுக்கும். உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை விநியோகம்செய்ய தென்னை விவசாயிகள் சார்பில் கோரிக்கைவைக்கப்படும்" எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்திராசலம், மாவட்டத் தலைவர் வசந்த ராஜன், கோவை தெற்கு மாவட்ட ஊடகப்பிரிவுச் செய்தித் தொடர்பாளர் தன பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பாஜக மாநிலப் பொருளாளர்

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் - எஸ்டிபிஐ

Last Updated : Jan 6, 2021, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details