கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் உள்ளது ஆழியார் பூங்கா. இந்த பூங்கா கடந்த 1962ஆம் ஆண்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இதை தற்போது பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
அரசின் அலட்சியம்: அசுத்தமாக காட்சியளிக்கும் ஆழியார் பூங்கா - கோயம்புத்தூர் ஆழியார் பூங்கா
கோவை: பொள்ளாச்சியில் உள்ள ஆழியார் பூங்கா மாசு அடைந்து காணப்படுவதால், பூங்காவை சீரமைக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுமுறையை கழிக்க வால்பாறை வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த பூங்காவிற்கும் வந்த வண்ணம் உள்ளனர். பூங்காவில் குழந்தைகள் விளையாடக்கூடிய மிதிபடகு, சிறிய வகை ரயில் உள்ளிட்டவை இருந்தும் அவைகள் குப்பையாக காட்சியளிக்கின்றன.
மேலும் பூங்காவில் கழிப்பிட வசதி இருந்தும் பராமரிப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் அவநிலை உருவாகியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. பூங்காவை முறையாக பாராமரித்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என, தமிழ்நாடு அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.