தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் பெண்கள் உள்ளாடைகளைத் திருடும் சைக்கோ திருடன்! - பெண்கள் உள்ளாடைகளை திருடும் சைக்கோ திருடன்!

கோவை: பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடும் சைக்கோ திருடனால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Psycho thief in coimbatore
Psycho thief in coimbatore

By

Published : Jan 21, 2020, 11:17 PM IST

கோவை துடியலூர் மீனாட்சி கார்டன் குடியிருப்பில் 250 வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதியில் சமீபகாலமாக சுற்றி திரியும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் உள்ளிட்டவற்றை மட்டும் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த சைக்கோ திருடனால் இப்பகுதிமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே நேரத்தில் பல பெண்களின் உள்ளாடைகளும், செருப்புகளும் காணாமல் போனது. பொதுமக்கள் தேடியபோது, ஆளில்லாத ஒரு வீட்டில் செருப்புகளும் உள்ளாடைகளும் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டுருந்தது. இதைகண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவையில் பெண்கள் உள்ளாடைகளை திருடும் சைக்கோ திருடன்

இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி மீண்டும், இதேபோன்று பெண்களின் உள்ளாடைகளும், செருப்புக்களும் மாயமானது. இதனால் பொதுமக்கள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்கள் அணியும் நைட்டி உடை அணிந்த அடையாளம் தெரியாத அந்த நபர், பெண்களின் உள்ளைடைகளையும் செருப்புக்களையும் மட்டும் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த விநோத சைக்கோ திருடன் குறித்து குடியிருப்புவாசிகள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற பெண் உட்பட ஏழு பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details