புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள், அனைவரும் கடந்த 30 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, நேற்று (ஜன.20) 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிமனை முன்பு அமர்ந்து எந்த பேருந்தையும் வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்! - புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரி: போக்குவரத்து கழக ஒப்பந்தப் பணியாளர்கள் பிஆர்டிசி பேருந்துகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி இரண்டாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
![புதுச்சேரியில் தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்! Transport workers protest Pudhucherry PRTC Bus Strike PRTC Bus Strike continues for 2nd day in Pudhucherry PRTC Bus Strike in Pudhucherry புதுச்சேரியில் 2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10324510-thumbnail-3x2-pud.jpg)
Pudhucherry PRTC Bus Strike
இந்நிலையில், இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி பிஆர்டிசி பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஒப்பந்த பணியாளர்ள் கூறுகையில், "தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா... பயணிகள் அவதி!