கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ளது காந்திநகர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு அமைக்க தயாரான நிலையிலிருந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் கடைக்கான சுற்றுச்சூழல் எழுப்பப்பட்டு கடைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வந்த நிலையில், இப்பகுதி பெண்கள் கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தினர்.
அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் டாஸ்மாக் அமையும் பகுதியில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதால், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் அதனால் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு இதையடுத்து, வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு களைந்து சென்றனர்.