கோயம்புத்தூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்பில் 1% இன் படி வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும், மாதாந்திர உதவித் தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், கொக்கோகோலா (Cocacola) நிறுவனங்களில் ஒப்பந்த காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.