கோயம்புத்தூர் மாவட்டம், ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாவை அதிமுக கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் சாதி ரீதியாக இழிவுபடுத்தி இருக்கையில் அமரக்கூடாது, பெயர் பலகை வைக்கக் கூடாது என்று கூறியதாக சரிதா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பலரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். சமூக வளைதளங்களிலும் இதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
ஊராட்சி மன்றத் தலைவரை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்: ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாவை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Protest demanding the arrest of the person who insulted the Panchayat President
அதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நபர் அதிமுக கட்சியை சார்ந்தவர் என்பதால் காவல்துறையினர் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும், சரிதாவிற்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினர்.