கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசுத் தலைமை மருத்துவமனையில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு, பிலாலியா உலமா பேரவை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிலாலியா உலமா பேரவை அமைப்பு, தமிழ்நாட்டில் 25 கிராமங்களை தத்தெடுத்து, அக்கிராமமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மருத்துவ உதவிகளையும் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேரவையைச் சார்ந்தவர்கள் கூறும்போது, "எங்கள் பேரவை சார்பாக ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களின் தேவைகளை செய்துவருகிறோம். இந்த நற்பணியில், பிலாலியா கல்வி நிறுவன மாணவர்களும் இணைந்து பங்காற்றுகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
நடிகையை அடித்ததற்கு மேடையில் மன்னிப்பு கேட்ட விஷால்