கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் 45 பேருக்கு CAS (Career Advancement Scheme) திட்டம் மூலம் பதவி உயர்வுக்கான இன்டர்வியூவில் 3 மாதங்களுக்கு முன்பு பங்கேற்றனர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் இதனிடையே தற்காலிகமாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் சங்கம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு காரணமாக இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனிடையே அந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் இதைத்தொடர்ந்து தங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று 45 பேராசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் தங்களுடைய பதவி உயர்வு மேலும் தாமதமாகும் என்று அஞ்சிய பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த போராட்டம் நீடிப்பதால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 76 காலிப்பணியிடங்கள்...