தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அன்று டிடிவி தினகரன், பின்பு சசிகலா, இன்று பன்னீர்செல்வம் - பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்!

பொள்ளாச்சியில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பரபரப்பு
பொள்ளாச்சியில் பரபரப்பு

By

Published : Jun 22, 2022, 6:54 PM IST

தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட பெரிய கட்சி அஇஅதிமுகவை மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கினர். அவர் மறைவுக்குப் பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டுப்பாட்டில் கட்சியை வழி நடத்தினார்.

அவர் மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் இருந்தார். ஆட்சி மாற்றத்துக்குப்பிறகு கட்சியில் உட்பூசல் ஏற்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கட்சிப்பணி ஆற்றினர்.

பொள்ளாச்சியில் பரபரப்பு

இதையடுத்து ஒற்றைத்தலைமை வேண்டும் என கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை எழுந்தது. பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலை உள்ளது.

அஇஅதிமுக பொதுக்குழு நடைபெறுவதையொட்டி, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பசும்பொன் தேவர் கழகம், கோவை தெற்கு மாவட்டம் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் அன்று டிடிவி தினகரன், பின்பு சசிகலா, இன்று பன்னீர்செல்வம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு போஸ்டர் பொள்ளாச்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு - ஏற்பாடுகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details