தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நத்தம் விஸ்வநாதனை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டிய அமமுகவினர் - AMMK

கோவை: சசிகலாவை அவதூறாகப் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சரும், நத்தம் சட்டப்பேரவை உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதனை கண்டித்து, அமமுகவினர் சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நத்தம் விஸ்வநாதனை கண்டித்து சுவரொட்டிகள்
நத்தம் விஸ்வநாதனை கண்டித்து சுவரொட்டிகள்

By

Published : Jul 1, 2021, 7:45 AM IST

Updated : Jul 1, 2021, 8:20 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் நத்தம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் கடந்த சில நாள்களுக்கு முன்பு 'சசிகலா ஒரு வேஸ்ட் லக்கேஜ் என் தெரிவித்து இருந்தார்.

சசிகலா Vs நத்தம் விஸ்வநாதன்

இதற்கு சசிகலா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று (ஜூன்.30) கோவையில் பல்வேறு இடங்களில் நத்தம் விஸ்வநாதனைக் கண்டித்து அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் 'சின்னம்மா அவர்களை அவதூறாகப் பேசிய நத்தம் விஸ்வநாதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருந்தது. இந்தக் கண்டன சுவரொட்டிகள் கோவை ரயில் நிலையம், ஆத்துப்பாலம், உக்கடம், மதுக்கரை ஆகிய நகரின் முக்கிய இடங்களில் அமமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ளன.

நத்தம் விஸ்வநாதனை கண்டித்து சுவரொட்டிகள்

இதையும் படிங்க: 'செல்லூர் ராஜு பெயரில் மோசடி!'

Last Updated : Jul 1, 2021, 8:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details