திருச்சி, தஞ்சை, காரைக்காலில் உள்ள அலுவலகங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை எனப்படும் NIA நேற்று சோதனை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் செய்தியாளர்களை சந்தித்தார்.
தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் -முகமது இஸ்மாயில்! - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில்
கோவை: தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் என பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
அப்போது பேசிய அவர், 2017ஆம் ஆண்டு ஹாதியா கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார் என்று எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அரசியல் சாசனத்தின் படி எங்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாததால் அவர்களுக்கு தோல்வி. அரசியல் அழுத்தம் காரணமாக எங்களை பழி வாங்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இலங்கை குண்டு வெடிப்பிற்காக, எங்களது அலுவலங்களில் சோதனையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் எனவும் முகமது இஸ்மாயில் வலியுறுத்தினார்.