மதுரை மாவட்டம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மணிமேகலை இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பொள்ளாச்சி அருகே பெரியகவுண்டனூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
கடனடைக்க பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தற்கொலை..! - தூக்கிட்டு தற்கொலை
கோவை: பெரியகவுண்டனூரில், மகளிர் சுய உதவிக்குழு கடனுக்கு செலுத்த பணம் இல்லாததால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
![கடனடைக்க பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தற்கொலை..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3674174-thumbnail-3x2-suicide.jpg)
இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ள நிலையில், மகனுக்கு அவ்வப்போது உடல் நலன் பாதிப்பு ஏற்படுவதால், மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒருவாரமாக கோபாலகிருஷ்ணனுக்கும், உடல் நலம் சரியில்லாததால் வேலைக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் சுயஉதவிக் குழுவிற்கு கடன் கட்டுவதற்குப் பணம் இல்லை என வீட்டில் மனைவி புலம்பியுள்ளார். இதனால் நேற்று மனமுடைந்த கோபாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிழக்கு காவல் நிலைய காவலர்கள், விசாரித்து வருகின்றனர்.