தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'எதிர்க்கட்சியின் தடையை மீறி பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்' - Pongal Gift Scheme for Overcoming Opposition

கோவை: பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சியினர் நீதிமன்றம் சென்றபோதும், அதிமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிவருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமாணி கூறினார்.

Pongal Gift Scheme
Pongal Gift Scheme

By

Published : Jan 7, 2020, 12:09 PM IST

கோவை பூ மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஒன்பது லட்சத்து 67 ஆயிரத்து 649 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் வழங்கினார்.

Pongal Gift Scheme

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்ததாகவும், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை மேம்படுத்தி ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கி வருவதாகவும் கூறினார். மேலும், இந்தத் திட்டத்தை தடுத்துநிறுத்த எதிர்க்கட்சியினர் நீதிமன்றம் சென்றபோதும், அதிமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிவருவதாகக் குறிப்பிட்டார்.

Pongal Gift Scheme

தொடர்ந்து பேசிய அவர், கோவை மாவட்டத்துக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்துக்காகவே 111 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details