கோயம்புத்தூர்: கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் 22, 23ஆவது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில், அரசு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த டோக்கன்களை குடிமைப் பொருள் அலுவலர்கள் வழங்காமல், 22ஆவது வார்டுக்குட்பட்ட ரேஷன் கடை ஊழியர் சரவணன், அவரது மனைவி மூலமாக வழங்கினார். அவர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் ஜெயராமன் ஆகியோர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டோக்கன்களை வழங்கி வந்தார்.