தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

By

Published : Nov 22, 2021, 4:17 PM IST

பொள்ளாச்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டதையடுத்து முன்னாள் துணை சபாநாயகர் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளார்.

Pollachi: பொள்ளாச்சியில் புதிய அங்கன்வாடி மையம்
பொள்ளாச்சியில் புதிய அங்கன்வாடி மையம்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒன்பது லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதது.

இதையடுத்து அதன் பணிகள் நிறைவடைந்தன. இதனை பொள்ளாச்சி V.ஜெயராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில், முன்னாள் துணை சபாநாயகர், பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் கழகத் தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர். பொள்ளாச்சி நகர கழக செயலாளர் V.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

பொள்ளாச்சியில் புதிய அங்கன்வாடி மையம்

பின்னர் முன்னாள் துணை சபாநாயகர் பேட்டியின் போது, “இங்குள்ள மக்களின் 50 ஆண்டுகால கனவு சில காரணங்களால் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட முடியவில்லை. பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலை, வால்பாறை, ஆனைமலை என உள்ளடக்கி முதலமைச்சர் இங்குள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும், இப்பகுதி 1852 முதல் வருவாய் கோட்டமாக உள்ளது.

கட்டடம் 2ஆவது முறையாக திறப்பு

மேலும், கரோனா காலத்தில் மக்களின் தேவையை புரிந்து புதிதாக குழந்தைகள் நலப்பிரிவு மையம் மூன்று மாடி கட்டிடமும், OP வார்டு நான்கு மாடி கட்டிடமும் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து பெறப்பட்டதாகும்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மருத்துவமனை திறக்கப்பட்டது. இதை, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டாம் முறை திறப்பது பாராட்டுக்குரியதாகும்” என்றார்.

மேலும், அம்மா மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஐந்து மாத சம்பள பாக்கி உள்ளது. அவர்கள் குடும்ப நலன் கருதி தமிழக முதலமைச்சர் சம்பளத்தை வழங்க வேண்டும், மீண்டும் அம்மா மருத்துவமனை சிறப்பாக செயல்பட வேண்டும்.

இங்குள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனையில் சிறப்பான மருத்துவர்களை நியமித்து மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:'ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீர்வு' - அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details