இந்து மக்கள் கட்சியினர் வாட்ஸ் ஆப் வாயிலாக சார் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், “கோவை மாவட்டம் புதூர் ஊராட்சி எட்டாவது வார்டு சென்னியப்பன் நகர் என்ற இடத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பெரிய பன்னாரி கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில் ஊராட்சி பகுதியில் சேகரிக்கக்கூடிய நெகிழிக் கழிவுகளை ஒரு மாதமாக கொட்டி வருகின்றனர்.
சமூக வலைதளம் வாயிலாக சார் ஆட்சியருக்கு மனு! - pollachi temple plastic waste issue
கோயம்புத்தூர்: நெகிழிக் கழிவுகளை கோயில் நிலங்களில் கொட்டி வரும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் சார் ஆட்சியருக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக மனு அளித்துள்ளனர்.

கோயில் நிலத்தில் கொட்டப்பட்டிருக்கும் நெகிழிக் கழிவுகள்
இது குறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் , சுப்பே கவுண்டன் புதூர் ஊராட்சி அலுவலகம், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கும் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தாங்கள் இப்பிரச்னைக்கு தீர்வு காணும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் நிலத்தில் கொட்டப்பட்டிருக்கும் நெகிழிக் கழிவுகள்