தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அருந்ததியர் என சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு! - அருந்ததியர் சான்றிதழ்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் பேரவை சார்பில் அருந்ததியர் என சான்று வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

sub collector  pollachi sub collector office petition  sub collector office petition by tribes  அருந்ததியர் சான்றிதழ்  அருந்ததியர் என சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
அருந்ததியர் என சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

By

Published : Nov 26, 2019, 12:29 PM IST

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆதிதிராவிடர் பேரவை சார்பில் வருவாய்த் துறை அலுவலர்களை கண்டித்து மனு அளிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் பேரவை செயற்குழு உறுப்பினர் கோபால் இதுகுறித்து கூறும்போது, கல்வி வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

அவரது ஆட்சிக் காலத்தில் 2009ஆம் ஆண்டு 50/2009 பல பிரிவுகளாக இருந்த சமூகத்தினரை ஒரு சமூகமாக அருந்ததியின மக்கள் என அங்கீகாரம் அளித்தார். தாழ்த்தப்பட்டோரில் மிகவும் பின்தங்கிய அருந்ததியர்களின் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து அருந்ததியர் எஸ் சி ஏ எனது ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசாணை உள்ளது.

தாய் பாசத்திற்கு காலமும் தூரமும் தடை இல்லை! மகனின் உணர்ச்சி பயணம்!

ஆனால் ஒருசில வருவாய்த் துறை அலுவலர்கள் சாதி வன்மத்தோடு சக்கிலியன் மாதாரி என்று வழங்குவதோடு மாணவ-மாணவிகளின் புகைப்படத்தை ஒட்டி சாதி சான்று வழங்கியுள்ளார்கள். இதனால் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

உட்பிரிவுகளை உள்ளடக்கிய அரசாணைப்படி தமிழில் அருந்ததியர் என்று மட்டும் சாதி சான்று வழங்க வேண்டும் பழைய சான்றிதழை மாற்றி புதிய அரசு ஆணைப்படி அருந்ததியர் என்றும் சான்றிதழ் வழங்க வேண்டும் அப்போதுதான் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

அருந்ததியர் என சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ABOUT THE AUTHOR

...view details