கோவை:சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பள்ளி மாணவ மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்பொருட்டு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செஸ் போட்டி குறித்த இலச்சினை கொண்ட ஸ்டிக்கரை கேஸ் சிலிண்டர், ஆட்டோ, தனியார் மற்றும் அரசுப்பேருந்துகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஒட்டினார்.