கோயம்புத்தூர்: கிராம கோயிலில் உள்ள வேல் கம்பியில் பாம்பை வெட்டி குத்திவைத்த குடிமகனை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகேயுள்ள குமாரபாளையத்தில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று மாலை அம்மன் கோயில் முன்புள்ள வேல் கம்பிகளில், ஒருவர் மதுபோதையில் சாரைப்பாம்பைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி, அதில் குத்தி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
கல்வி டிவியில் நீட் தேர்வு பயிற்சி - யூடியூப் மூலம் மறுஒளிபரப்பு
இதை அவ்வழியாக வந்த பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் கிராம மக்களுக்கு தெரிந்ததும், அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேல் கம்பிகளில் பாம்பு குத்திவைக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவியது.
இதனையடுத்து கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாம்பைக் கொன்று வேலில் குத்தி விட்டு தப்பியோடியது, அதே கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பது தெரியவந்தது.
சாரைப் பாம்பை வெட்டி கோயில் வேல் கம்பியில் குத்திய குடிமகன்! வைரல் காணொலி இதனையடுத்து தலைமறைவான அவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவர் எதற்காக இப்படி செய்தார் என்பது தெரியாமல் கிராம மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.